மெஸ்ஸி வழியில் அல்வரெஸ்..! ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய அத்லெடிகோ!
லா லீகா தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணி தனது சொந்த மண்ணில் ரியல் மாட்ரிட் அணியை 5-2 என வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ஜூலியன் அல்வரெஸ் 51-ஆவது நிமிஷத்தில் பெனால்டியிலும் , 63-ஆவது நிமிஷத்தில் ஃபிரி கிக்கிலும் கோல் அடித்து அசத்தினார்.
லா லீகா தொடரில் ரியல் மாட்ரிட் அணியை 2-5 என அத்லெடிகோ வென்றது.
இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் 25, 36ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, அத்லெடிகோ அணியினர் 14, 45+3, 51, 63, 90+3-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்கள்.
பார்சிலோனா அணியில் இருக்கும்போது மெஸ்ஸி ரியல் மாட்ரிட் அணியை பல முறை வீழ்த்தியுள்ளார். தற்போது, ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த அல்வரெஸும் இதை வெற்றிகரமாக செய்து வருகிறார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.