குழந்தையைப் பெற்றெடுக்க இயலாதென்ற நடிகையின் திருமண புகைப்படங்கள்!
பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான செலீனா கோம்ஸ் தனது கணவர் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான செலீனா கோம்ஸ் (33 வயது) தனது கணவர் பென்னி பிளாங்கோ உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த டிசம்பரில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், “9.27.25"எனக் குறிப்பிட்டு புகைப்படங்களைப் பதிவிடுள்ளார்.
தனக்கு இருக்கும் அதிகமான உடல்நலம் சார்ந்த பிரச்னைகளால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது என அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பிளாங்கோ?
ஜஸ்டின் பைபர், ஈத் ஷீரன் மாதிரியான இவரும் ஒரு நட்சத்திர இசை ஆல்பங்களை வெளியிட்டு பிரபலமானவர்.
இவர்கள் இருவரும் 2015இல் ‘சேம் ஓல்ட் லவ்’ , 2019-இல் ‘ஐ கேன் கெட் எனாஃப்’ மற்றும் கடைசியாக 2023-இல் ’சிங்கள் சூன்’ எனும் ஆல்பங்களில் ஒன்றாக பணியாற்றி இருந்தார்கள்.
செலீனா கோம்ஸ் நடிப்பில் கடைசியாக 2019இல் ‘ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங்’ எனும் தொடரில் நடித்திருந்தார்.