செய்திகள் :

விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா

post image

நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 40 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ஓவியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘விஜய்யைக் கைது செய்யவும் (Arrest vijay)’ எனக் கூறியிருந்தார். இதனைக் கண்ட த.வெ.க. தொண்டர்கள் ஓவியாவைக் கடுமையான வார்த்தைகளால் தாக்க, சில நிமிடங்களிலேயே அப்பதிவை நீக்கிவிட்டார்.

ஓவியா பதிவிட்டு நீக்கியது...

ஆனால், ஓவியாவின் பழைய பதிவுகளுக்குச் சென்ற விஜய் ரசிகர்கள் அவரை ஆபாசமாகத் திட்டி வருகின்றனர். இவற்றை ஸ்க்ரீன் ஷாட் (screen shot) எடுத்த ஓவியா ஒவ்வொன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிக்க: கரூர் பலிக்கு 5 காரணங்கள்? பிரேமலதா விளக்கம்

actor oviya posted about tvk leader vijay arrest

கரூர் பலி: மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!

கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெ... மேலும் பார்க்க

கவர்ச்சி நடனத்தில் ரஷ்மிகா..! தம்மா முதல் பாடலின் டீசர்!

நடிகை ரஷ்மிகாவின் கவர்ச்சி பாடலின் டீசர் விடியோ வெளியாகியுள்ளது. முழுமையான பாடல் நாளை (செப்.29) வெளியாகவுள்ளது.ஹிந்தியில் தம்மா எனும் படத்தில் ரஷ்மிகா மந்தனா சூப்பர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளா... மேலும் பார்க்க

கரூர் பலி: விஜய் சேதுபதி திரைப்பட நிகழ்வு ரத்து!

கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் சேதுபதியின் திரைப்பட நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி வெற்றியைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர்... மேலும் பார்க்க

குழந்தையைப் பெற்றெடுக்க இயலாதென்ற நடிகையின் திருமண புகைப்படங்கள்!

பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான செலீனா கோம்ஸ் தனது கணவர் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்காவைச் சே... மேலும் பார்க்க

தேவரா 2 தொடக்கம்: அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா 2 படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கொரடால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் கடந்தாண்டு செப்.27ஆம் தேதி தேவரா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில... மேலும் பார்க்க

வசூல் வேட்டையில் ஓஜி!

பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது. ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் - இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை பிரம்மாண்ட... மேலும் பார்க்க