செய்திகள் :

கரூர் பலி: மின்மாற்றி மீது தொண்டர்கள் ஏறியபோது மட்டுமே மின்தடை - மின்வாரியம்

post image

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது தொண்டர்கள் மின்மாற்றியின் மீது ஏறியபோது மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கரூர் மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆட்சியர் தங்கவேல், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பிரசாரக் கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டது குறித்து ராஜலட்சுமி பேசியதாவது,

''விஜய் நிகழ்விடத்திற்கு வருவதற்கு முன்பு அந்த இடத்தில் சிறிதுநேரம் மின்தடை இருந்தது உண்மைதான். மரத்தின்மீதும் மின்மாற்றியின் மீதும் தொண்டர்கள் ஏறியபோது மட்டுமே மின்தடை செய்தோம்.

கிளை முறிந்து லைனில் விழுந்துவிடுவார்களோ, அப்படியாகிவிட்டால் பிரச்னை பெரிதாகிவிடும் என்ற அச்சத்தில் காவலர்கள் உதவியோடு அவர்களை விரைந்து நாங்கள் மீட்டோம். இதற்கிடையே மின்தடை இருந்தது.

மின்மாற்றியில் இருந்து தொண்டர்கள் இறங்கிய பிறகு அப்பகுதியில் மீண்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டுவிட்டது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | கரூர் பலி: அருணா ஜெகதீசன் விசாரணை தொடங்கியது!

Karur stampede Power outage occurred when volunteers climbed on transformer Electricity Board

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை பணியிடை நீக்க செய்க! -அண்ணாமலை

கரூரில் விஜய் பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு விஜய் மீது குற்றம் சுமத்துவது தவறு என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை பணியிடை நீக்க செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர... மேலும் பார்க்க

கரூர் பலி: எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான்; அண்ணாமலை

கரூர் துயரச்சம்பவத்தில் எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்திய... மேலும் பார்க்க

கரூர் பலி: ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை - அண்ணாமலை

ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஆட்சியர் மீதும், காவல் துறை கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும... மேலும் பார்க்க

கரூர் பலி: அருணா ஜெகதீசன் விசாரணை தொடங்கியது!

கரூர் துயரச்சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒருநபர் விசாரணை தொடங்கியது. அப்பகுதி மக்களிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் என்ன நடந்ததென அவர் விசாரணை மேற்கொள்கிறார். தூத்... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்தில் 2 வயது குழந்தை பலி: “குழந்தையை அழைத்துச் சென்றது எங்கள் தவறு!” -பெற்றோர்

கரூரிக் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூரின் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் அரசியல் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் திரண்டிருந்த கட... மேலும் பார்க்க

முதலுதவி செய்யாமல் சென்றது கண்டிக்கத்தக்கது: பெ. சண்முகம்

விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நெரிசலில் பலி ஏற்பட்ட நிலையில் அவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த முதலுதவியும் செய்யாதது கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனி... மேலும் பார்க்க