செய்திகள் :

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை பணியிடை நீக்க செய்க! -அண்ணாமலை

post image

கரூரில் விஜய் பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு விஜய் மீது குற்றம் சுமத்துவது தவறு என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை பணியிடை நீக்க செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர் கே. அண்ணாமலை இன்று(செப். 28) அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கரூர் மாவட்ட ஆட்சியர் மீதும் காவல் துறை கண்காணிப்பாளர் மீதும் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 10 - 15 பேர் எங்காவது உயிரிழக்க நேரிடும்போது, சம்பந்தப்பட்ட அரசுகள் அங்குள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கின்றன. ஆகவெ, இங்கும் நடவடிக்கை தேவை. இதன்மூலம், பிற மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுக்கு ஒரு எச்சரிகையாக இந்த நடவடிக்கை அமையும்.

விஜய்தான் முதன்மை குற்றவாளி என்ற குற்றச்சாட்டை நாங்கள் ஏற்க மாட்டோம்.

விஜய்யை பார்க்க ஆயிரம், பத்தாயிரம், பத்து லட்சம் பேர் கூட வரலாம். அது மக்களின் உரிமை. அப்படி, வருகை தரும் கூட்டத்துக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை.

இவர்களுக்கு நடுவே அரசு ஒரு இடைத்தரகராக அரசு பணியாற்ற வேண்டும். விஜய்க்கும் அனுமதி வழங்கிட வேண்டும்; அதன்பின் அங்கு வரும் மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஆனால், அந்த வேலையை அரசு செய்யவில்லை. மேற்கண்ட இரு விஷயங்களிலும் அரசு தோற்றுவிட்டது. ஒருதலைப்படசமாக, பாரபட்சமாக அரசு சாமானிய மக்களிடமும் விஜய்யிடமும் நடந்து கொண்டுள்ளது.

ஆகவே, மாவட்ட ஆட்சியர் மீதும் காவல் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

suspend Karur District Collector, SP: says Annamalai

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.தமிழ்நாடு முழுவதும் இன்று(செப். 28) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ... மேலும் பார்க்க

விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதன... மேலும் பார்க்க

கரூரில் 40 பேர் உயிரிழப்புக்கான முக்கிய காரணம் என்ன? தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கம்!

கரூர்: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழக்க காரணம் என்ன? என்பதை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கியுள்ளார்.கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் மயக்கமடைந்த... மேலும் பார்க்க

கரூர் பலி: முதல்வரிடம் தொலைபேசியில் விசாரித்த ராகுல் காந்தி!

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விசாரித்தார். இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் குறிப்ப... மேலும் பார்க்க

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: கரூர் மாவட்ட ஆட்சியர்

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தெரிவித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயி... மேலும் பார்க்க

கரூர் பலி: யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை - கனிமொழி

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு படுகா... மேலும் பார்க்க