தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" - அண்ணாமலை சொல்வதென்ன?
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த சூழலில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரே முதல் குற்றவாளிகள் எனப் பேசியுள்ளார்.
"கிரௌடு கன்ட்ரோல் மேனேஜ்மென்ட்டில் தொடர்ந்து தவறு நடக்கிறது"
அண்ணாமலை, "சம்பவம் நடந்து சுமார் 24 மணிநேரம் ஆராய்ந்து இப்போது பேசுகிறோம். பல குளறுபடிகள் நடந்திருக்கின்றன.
ஒன்று, பொதுமக்கள் கூடுவதற்கு சரியான இடத்தைக் கொடுக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் சரியான முறையில் கன்ட்ரோல் பண்ற மாதிரி பணியமர்த்தப்பட்டார்களா எனக் கேட்டீங்கன்னா இல்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி, சென்னையில் நடந்த இந்தியன் ஏர்போர்ஸ் ஷோல ஐந்து பேரு இறந்தாங்க.
இந்த கிரௌடு கன்ட்ரோல் மேனேஜ்மென்ட் செய்வதில் தமிழகத்தில் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்துகொண்டே இருக்கிறது. கரூரும் அப்படித்தான்.

சரியான இடத்தைக் கொடுக்கவில்லை:
எங்களுடைய முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் வைக்கின்றோம். காரணம் அவர்களுடைய கடமை சரியான இடத்தைக் கொடுப்பது. சரியான இடம் இல்லையென்றால் பர்மிஷன் கொடுக்காதீர்கள்.
வேலுசாமிபுரம் கரூரில் இருக்கக்கூடிய ஒரு சின்ன ஒரு சந்து, அங்கு வந்து கூட்டத்தை நடத்துவதற்கு வாய்ப்பே கிடையாது. எதற்குக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
தமிழக வெற்றிக்கழகம் கொடுத்த பர்மிஷன் லெட்டரை காவல்துறை அதிகாரி ஒருத்தர் அனுப்பி இருந்தார். அவங்க லைட் ஹவுஸ் ரவுண்டானா அல்லது உழவர் சந்தை பக்கம் கேட்டு இருக்காங்க. அதனால் முதல் தவறு லோக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் மீது.
"500 காவலர்களெல்லாம் களத்தில் இல்லை"
மாவட்டத்தினுடைய ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் இடத்தை சரியாக தேர்வு செய்யல. அடுத்து தமிழகத்தினுடைய பொறுப்பு டிஜிபி ஒரு பேட்டி கொடுக்கிறார், 500 பேர் பாதுகாப்பு வழங்கியதாக. ஆனால் 500 பேர் எல்லாம் இல்லை. ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ், கார்டு, வண்டிகளுக்குள் உட்கார்ந்திருந்தவங்க இவங்க எல்லாம் சேர்த்து 500 இருக்கலாம். கீழே இருந்த போலீஸ் 100 பேர் கூட இல்லை.

10,000, 20,000, 50,000 நம்பரை விடுங்க, ஒரு கூட்டம் வரும் என்று தெரிந்த பிறகு சரியான காவல் துறை காவலர்களை கீழே பதுகாப்புக்கு நிறுத்தனுமே. அதையே செய்யாம இன்னைக்கு, 500-ன்னு சொல்லி மலுப்புறாங்க. கீழே 500 பேரெல்லாம் இல்லை.
ஆம்புலன்ஸ் கூட போக முடியாத சாலை
அனுமதி கொடுக்கப்பட்ட சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் கூட போக முடியாது. ஒரு விவிஐபிக்கு உடல்நிலை பிரச்னை என்றால் கூட அழைத்துச்செல்ல முடியாத சந்தை ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் சஸ்பென்ட் செய்யப்பட வேண்டும். ஆளும்கட்சி அரசியல்வாதிகள் 1008 சொல்லுவாங்க. ஒரு அரசியல் கூட்டம் நடத்தவிடாமல் தடுக்க, அதற்கெல்லாம் அதிகாரிகள் பம்ம கூடாது. இவர்கள் மீதான நடவடிக்கை மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக இருக்கும். "