கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்தில் உயிரை இழந்திருக்கின்ற குடும்பத்தார்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
நடந்த சம்பவத்தைப் பற்றித் தீவிர விரிவான விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. எங்களின் கோரிக்கையும் அதுதான்.

இறந்த குடும்பங்களுக்கு போதிய நிவராணம் அளிக்கப்பட வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுக்கவேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்திருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணமாக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வரைமுறைகளைத் துரிதப்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.