செய்திகள் :

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' - பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

post image

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - சுரேஷ் கோபி

கேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைவர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.

தொடக்கத்தில் ஆலப்புழாவில் அல்லது திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியிருந்தார்.

அதன் பின்னர் பாஜக தலைவர்களிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான இடம் குறித்த விவாதம் எழுந்தது.

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

கோழிக்கோட்டில் அமைக்க வேண்டும் என்று சிலரும், திருவனந்தபுரத்தில் அமைக்க வேண்டும் என்றும், கொச்சியில் அமைக்க வேண்டும் என்றும் தலைவர்களிடையே பல்வேறு கருத்துகள் எழுந்தன.

இன்று இது குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது அவர் எந்தப் பதிலும் கூறாமல் சென்றுவிட்டார். இந்த நிலையில் எய்ம்ஸ் விவகாரத்தில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

இது பற்றி வீணா ஜார்ஜ் கூறுகையில்,

"கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்பது மாநிலம் முழுவதும் உள்ள மக்களின் கோரிக்கையாகும்.

பிற மாநிலங்களில் இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் வழங்கும்போது, கேரளாவுக்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் உரிமைகூட இல்லையா? எனவே கினாலூரில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.

கேரளாவில் எய்ம்ஸ் அமைப்பது சம்பந்தமாக எழுந்துள்ள விவாதங்கள் காரணமாக எய்ம்ஸ் வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையைப் புறந்தள்ளிவிடக்கூடாது.

வீணா ஜார்ஜ்
வீணா ஜார்ஜ்

கேரளாவிற்கு எய்ம்ஸ் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த ஒரு அரசியல் முடிவுதான் எடுக்க வேண்டியுள்ளது என நான் கருதுகிறேன்.

எய்ம்ஸ்-க்கு ஆதரவான நிலைப்பாட்டை எவ்வளவு சீக்கிரம் எடுக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக எய்ம்ஸ் வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை விரைவில் எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.

கரூர்: அன்புமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் ஒதுக்கிய உழவர் சந்தை திடல்; விஜய்க்கு மறுத்தது ஏன்?

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை. உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்த... மேலும் பார்க்க

``விஜய் போன்ற பிரபலங்களுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரும், அதனால்'' - FEFSI சொல்வதென்ன?

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (film employees federation of south india) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ... மேலும் பார்க்க

கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை... மேலும் பார்க்க

கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிற... மேலும் பார்க்க

கரூர்: ``படபடப்பு இருக்கும்; தம்பி விஜய் வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் வருவார்கள்'' - சீமான்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?

நேற்று கரூரில் நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் பலர் உயிரிழந்திருந்தனர்... காயமடைந்திருந்தனர். இன்று காலை வரையிலான நிலவரப்படி, இந்தச் சம்பவத்தால் 39 பேர் உயிரிழந்திரு... மேலும் பார்க்க