தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கவர்ச்சி நடனத்தில் ரஷ்மிகா..! தம்மா முதல் பாடலின் டீசர்!
நடிகை ரஷ்மிகாவின் கவர்ச்சி பாடலின் டீசர் விடியோ வெளியாகியுள்ளது. முழுமையான பாடல் நாளை (செப்.29) வெளியாகவுள்ளது.
ஹிந்தியில் தம்மா எனும் படத்தில் ரஷ்மிகா மந்தனா சூப்பர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
தினேஷ் விஜயன், அமர் கௌசிக் தயாரிப்பில் உருவாகியுள்ள தம்மா படத்தினை ஆதித்யா சர்போட்கர் இயக்கியுள்ளார்.
மேட்டாக் ஹாரர் நகைச்சுவைப் படங்களான ஸ்ட்ரீ 2, முஞ்ஜியா படங்களைத் தொடர்ந்து தம்மா படமும் இந்த யுனிவர்ஸில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பரேஷ் ராவல், நவாசுதீன் சித்திக், பைசல் மாலிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்.21ஆம் தேதி வெளியாகிறது.
Witness every girl's voice of love and heartbreak.
— Maddockfilms (@MaddockFilms) September 28, 2025
Presenting Thamma’s first song, #TumMereNaHuye.
Teaser out now.
Song out tomorrow.#Thamma#ThammaThisDiwali#MaddockFilmspic.twitter.com/aDMxombXaJ