தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புது தில்லி: தில்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று(செப். 28) ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘டெரர்ரைஸெர்ஸ்111’ என்ற குழுவானது இன்று(செப். 28) தில்லியில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கும் அதேபோல, தில்லி உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது.
தில்லியின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் காலை 6 மணியளவில் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். அதன்பின் அவை யாவும் புரளி என்பது உறுதிசெய்யப்பட்டது.