செய்திகள் :

கரூர் பலி: முதல்வரிடம் தொலைபேசியில் விசாரித்த ராகுல் காந்தி!

post image

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விசாரித்தார்.

இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் மீது எடுத்துக்கொள்ளும் அக்கறைக்கு ராகுலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது,

கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

40 பேர் பலி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவரையொருவர் முந்திக்கொண்டு கூட்டம் அலைமோதியது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று பலியானதால், கூட்ட நெரிசல் பலி எண்ணிகை 40 ஆக அதிகரித்துள்ளது.

நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிக்க | கரூர் பலி: யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை - கனிமொழி

Rahul Gandhi inquired about Karur stampede

விஜய் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு!

விஜய் பிரசாரத்துக்கும் பொதுக்கூடங்களுக்கும் அனுமதியளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.கரூரில் விஜய... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.தமிழ்நாடு முழுவதும் இன்று(செப். 28) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ... மேலும் பார்க்க

விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதன... மேலும் பார்க்க

கரூரில் 40 பேர் உயிரிழப்புக்கான முக்கிய காரணம் என்ன? தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கம்!

கரூர்: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழக்க காரணம் என்ன? என்பதை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கியுள்ளார்.கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் மயக்கமடைந்த... மேலும் பார்க்க

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: கரூர் மாவட்ட ஆட்சியர்

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தெரிவித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயி... மேலும் பார்க்க

கரூர் பலி: யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை - கனிமொழி

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு படுகா... மேலும் பார்க்க