விஜய் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு!
பிசிசிஐ-ன் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு!
பிசிசிஐ-ன் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ-ன் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (செப்டம்பர் 28) மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ-ன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
45 வயதாகும் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ-ன் 37-வது தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிசிசிஐன் தலைவராக செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி கடந்த மாதம், தலைவர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், பிசிசிஐ-ன் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஆல்ரவுண்டரான மிதுன் மன்ஹாஸ் 157 முதல் தர போட்டிகள், 130 லிஸ்ட் ஏ போட்டிகள், 55 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தர போட்டிகளில் 9,714 ரன்களும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 4,126 ரன்களும் அவர் குவித்துள்ளார்.
Mithun Manhas has been elected as the new president of BCCI.
இதையும் படிக்க: எங்களுடைய மகனை நினைத்து பெருமையாக உள்ளது; அபிஷேக் சர்மாவின் தந்தை பேட்டி!