விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் விஜய் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.