ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்! பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது...
166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்! அறிமுகப் போட்டியில் 8 விக்கெட்டுகள்!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடி இந்திய வீரர் ராகுல் சஹார், 166 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே மற்றும் ஹாம்ஃப்ஷைர் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சர்ரே 147 ரன்களும், ஹாம்ஃப்ஷைர் 248 ரன்களும் எடுத்தனர். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் முதல் சர்ரே அணி 281 ரன்களில் ஆல்-அவுட்டானது.
அதனைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சர்ரே அணி, ஹாம்ஃப்ஷைர் அணியின் பந்து வீச்சத்தாக்குப் பிடிக்க முடியாமல் 160 ரன்களில் சுருண்டது. இதனால், சர்ரே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சர்ரே அணி வீரர் ராகுல் சஹார் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
Rahul Chahar announced himself in style
— Cricketopia (@CricketopiaCom) September 28, 2025
Figures of 24-7-51-8 on debut for Surrey in the County Championship, breaking a record that stood since 1859. He surpassed William Mudle’s 7/61 to register the best debut figures in Surrey history.
pic.twitter.com/0VErqYF2NS
கவுன்டி கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமான ராகுல் சஹார், தன்னுடைய முதல் போட்டியிலேயே 166 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, சர்ரே அணிக்காக விளையாடிய வில்லியன் முல்டே 1859 ஆம் ஆண்டு ஹாம்ஃப்ஷைருக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை ராகுல் சஹார் முடியடித்துள்ளார்.
ஐபில் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், பஞ்சாப் அணிக்காவும் விளையாடியுள்ள ராகுல் சஹார், இந்திய அணிக்காகவும் சர்வதேசப் போட்டிகளில் 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2021 ஆம் ஆண்டு வரை ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும், 6 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.