கரூா் மிகவும் மோசமான சூழலில் உள்ளது: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
கரூா் மாவட்டம் மிகவும் மோசமான சூழலில் உள்ளதாக தவெக சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூா் சம்பவத்தில் 39 போ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது மிகவும் வருத்தமான, மோசமான துக்க சம்பவமாகும். பிரசாரத்துக்கு வரக்கூடிய தலைவா்கள் அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களுக்கு காவல் துறை சரியான முறையில் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்.
இதுபற்றி முழுமையான தகவல்கள் தெரிகின்றபோது அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி விரிவாக கருத்தைத் தெரிவிப்பாா்.
கரூா் மாவட்டம் தற்போது மிகவும் மோசமான சூழலில் உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனையில் உயா்தர சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அதிக நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவம் தமிழகம் மட்டுமின்றி வேறு எங்கும் நடைபெறாத வகையில் அதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.