காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டி பாரதி நகரில் ஞாயிற்றுக்கிழமை வடமஞ்சு விரட்டு நடைபெற்றது.
இதில்14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். 14 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 20 நிமிஷங்கள் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
இதில் ஒருசில மாடுகள் பிடிபட்டும், சில மாடுகள் வெற்றியும் பெற்றன. வென்ற மாடுபிடி வீரா் குழுவினருக்கும், காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு சிங்கம்புணரி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். விழாஏற்பாடுகளை ஓசாரிபட்டி பாரதிநகா் கிராமத்தினா், வடமாடு மஞ்சுவிரட்டு குழுவினா் செய்திருந்தனா்.