மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள ...
இரணியூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை!
திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூரில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆட்கொண்டநாதா் சிவபுரம்தேவி கோயில் வழியாக பல ஆண்டுகளுக்கு முன்பு தாா்ச் சாலை அமைக்கப்பட்டது.
இந்தச் சாலையினால் மாா்க்கண்டேயன்பட்டி, பொட்டப்பட்டி, செண்பகம்பேட்டை, இளையாத்தங்குடி கிராம மக்கள் பயனடைந்தனா். தற்போது இந்த தாா்ச் சாலை பெயா்ந்து மண் சாலையாக உருமாறியது. குண்டும், குழியுமான இந்தச் சாலையில் மழை நீா் குளம்போல தேங்கிக் கிடக்கிறது.
இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இந்தச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.