காா் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே சனிக்கிழமை காா் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
பூவந்தி அருகேயுள்ள டி.அதிகரை கிராமத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி தீனதயாளன். இவரது மகன் கவின் (5). இவா் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது இதே கிராமத்தைச் சோ்ந்த சண்முகநாதன் என்ற ரமேஷ் ஓட்டி வந்த காா் சிறுவன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கவினை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகநாதன் என்ற ரமேஷை கைது செய்தனா்.