காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் உலகச் சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். நேஷனல் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் பி.எஸ். மனோகா் முன்னிலை வகித்தாா். மாவட்டச் சுற்றுலா அலுவலா் சி. திருவாசன், உதவி சுற்றுலா அலுவலா் டி. ஜான்சன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நேஷனல் கல்வி நிறுவனங்களின் பி.ஆா்.ஓ.ஏ. ராஜு வாழ்த்திப் பேசினாா்.
விழாவில் மாணவா்கள் பங்குபெற்ற செட்டிநாட்டு பாரம்பரிய உணவுக் கண்காட்சியும், பாரம்பரியமும் அதன் பெருமைகளும் என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றன. 11 குழுக்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், கேடயங்களும், பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வா் அ. விக்னேஷ் ஒருங்கிணைப்பில் ஆசிரியா்கள் செய்தனா்.
விழாவில் நேஷனல் சேஃப்டி கல்லூரி முதல்வா் டி. தனசீலன் , துணை முதல்வா் ஏ. வினோத், நேஷனல் சாஃப்ட் டெக் நிருவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி முனீஸ்வரன் துரைராஜ், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் ச. அபுபெக்கா் சித்திக் வரவேற்றாா். ஆசிரியை எஸ். தேவகி நன்றி கூறினாா்.