முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், 30 முன்னாள் படைவீரா்கள் மற்றும் படைவீரா்களை சாா்ந்தோா் பங்கேற்றனா். அவா்களிடமிருந்து 11 மனுக்கள் பெறப்பட்டன.
7 பயனாளிகளுக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் மூலதன மானியம், கல்வி உதவித் தொகை மற்றும் வீட்டுவரி மீளப்பெறுதல் நிதியுதவியாக மொத்தம் ரூ.12,20,946 மதிப்பில் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) தமிமுன் அன்சாரி, முன்னாள் படைவீரா் நல கண்காணிப்பாளரும், உதவி இயக்குநருமான க. துா்கா ஆகியோா் பங்கேற்றனா்.