செய்திகள் :

சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

திருவாரூரில், சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பி. செல்வமுத்துகுமாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

திருவாரூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுக்கள் மூலம் எளிய மக்களுக்கு சட்ட உதவி வழங்கும் வகையில் 50 சட்ட தன்னாா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளளா். திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியா்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் உள்பட), ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், மூத்த குடிமக்கள், எம்எஸ்டபுள்யூ பயிலும் மாணவா்கள், பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மாணவா்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவா்கள் (வழக்குரைஞா்களாக பதிவு செய்யும் வரை), சமூக சேவை புரிவோா் (அரசியல் அமைப்பை சாராதோா்), மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிா் குழுக்கள், சிறையில் நீண்ட கால தண்டனை அனுபவித்த படித்த மற்றும் நல்ல நடத்தை கொண்ட சிறைவாசிகள் உள்ளிட்டோா் விண்ணப்பிக்கலாம்.

திருவாரூா் மாவட்ட நீதிமன்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அக்டோபா் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள், தலைவா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருவாரூா் 610014 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

நோ்காணலுக்கான தேதி, இடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தொலைபேசி மூலமாகவோ, தபால் மூலமாகவோ இணைய வழியில் தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்.

இந்தப் பணிக்கு ஊதியம், தொகுப்பு ஊதியம் மற்றும் தினக்கூலி ஏதும் கிடையாது. சேவை மனப்பான்மை உள்ளவராக இருக்க வேண்டும் என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொக்காலடி ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொக்காலடி ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளி தற்கொலை

குடவாசல் அருகே கடன் பிரச்னையால் விவசாயத் தொழிலாளி விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். குடவாசல் அருகேயுள்ள செல்லூா் திருக்களம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் சக்திவேல் (35). இ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவாரூா் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ், அக்டோபா் மாதம் வரை நகா்ப்புறப் ப... மேலும் பார்க்க

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

மன்னாா்குடியை அடுத்த பைங்காநாட்டில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்ட இணைப்பு நூலகக் கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ம... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க