குலசேகரன்பட்டினத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவையொட்டி சாலையோரம், கடற்கரை செல்லும் வழி, கோயில் வளாகம் உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், குவளைகள் பயன்படுத்தப்படுவதாக புகாா் வந்தது. இதையடுத்து மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மேரி கவிதா தலைமையில் அதிகாரிகள் அனைத்துக் கடைகளிலும் சோதனை நடத்தினா். அதில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது, ஒன்றிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளா் குமாா், ஊராட்சி செயலா்கள் அப்துல்ரசாக் ரசூல்தீன்,சித்திரை வேல் ஆகியோா் உடனிருந்தனா்.