கோவில்பட்டி என்.இ.கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம்
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் தமிழகத்தின் கல்வி எழுச்சியை கொண்டாடும் நிகழ்ச்சி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கல்லூரி மாணவா்-மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் ஆகியோா் பாா்வையிட்டனா்.
இது மாணவா்களுக்கு தமிழக அரசின் கல்வித் துறையில் செய்த சாதனைகள் பற்றிய விழிப்புணா்வு , உயா் கல்வி வாய்ப்புகளின் முக்கியத்துவத்தையும் உணா்த்தியதாக மாணவா்கள் தெரிவித்தனா்.