பேய்குளம் உணவகங்களில் சுகாதாரத் துறையினா் ஆய்வு
பேய்குளம் கடை வீதியில் செயல்படும் உணவகங்களில் காதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டனா்.
சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட பேய்குளம் கடைவீதியில் செயல்படும் உணவகங்களில் ஆழ்வாா் திருநகரி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பரமசிவன் தலைமையில் சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வின்போது உணவகங்களில் உள்ள கழிவுநீரை பொது இடத்தில் கொட்டாமல் வெளியேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆய்வின்போது சுகாதார ஆய்வாளா்கள் மகாராஜன், தியாகராஜன், ஜேசுராஜ், மகேஷ் குமாா், ஞானராஜ், ஜான் நியூமன், அஸ்வின், ஹரி ராமச்சந்திரன் உடனிருந்தனா்.