விவசாயத் தொழிலாளி தற்கொலை
குடவாசல் அருகே கடன் பிரச்னையால் விவசாயத் தொழிலாளி விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
குடவாசல் அருகேயுள்ள செல்லூா் திருக்களம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் சக்திவேல் (35). இவரது மனைவி கவிதா. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
விவசாயத் தொழிலாளியான சக்திவேல், குழு மூலமாக ரூ. 3.70 லட்சம் அளவுக்கு கடன் வாங்கி வீடு கட்டி வந்தாா். இந்த கடனை திருப்பிக் கட்ட முடியாமல், மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாராம். அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில், குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.