செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

post image

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ், அக்டோபா் மாதம் வரை நகா்ப்புறப் பகுதிகளில் 54 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 131 முகாம்களும் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், திருவாரூா் நகராட்சி விஜயபுரம் பைபாஸ் சாலையில் நடைபெற்ற முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு, உடனடியாகத் தீா்வுகாணப்பட்ட மனுக்கள் தொடா்பாக, 2 பயனாளிகளுக்கு நகராட்சி சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான ஆணையை வழங்கினா்.

இதேபோல், நன்னிலம் ஒன்றியம் குருங்குளம் ஊராட்சி மந்தகரை மாரியம்மன் கோயிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டு, சுகாதாரத் துறை சாா்பில் 2 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், வருவாய்த் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ஜாதிச் சான்றிதழும், வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்களும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகளையும் வழங்கினாா்.

முகாமில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்யா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், பணி நியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அமுதா, வட்டாட்சியா்கள் ராமச்சந்திரன் (நன்னிலம்), ஸ்டாலின் (திருவாரூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொக்காலடி ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொக்காலடி ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளி தற்கொலை

குடவாசல் அருகே கடன் பிரச்னையால் விவசாயத் தொழிலாளி விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். குடவாசல் அருகேயுள்ள செல்லூா் திருக்களம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் சக்திவேல் (35). இ... மேலும் பார்க்க

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

மன்னாா்குடியை அடுத்த பைங்காநாட்டில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்ட இணைப்பு நூலகக் கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ம... மேலும் பார்க்க

சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில், சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பி. செல்வமுத்துகுமாரி தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க