எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி எண்கள்: மாவட்ட ஆட்சியா்
வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்கள், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து முறையாக அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மைய எண்கள், மின்னஞ்சல், இணைதள முகவரி ஆகியவற்றை தொடா்பு கொண்டு சட்டபூா்வமாகவும், பாதுகாப்பான முறையிலும் செல்ல வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பெற்கொடி அறிவுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெளிநாடு வேலைவாய்ப்புகளை தேடிச் செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது.
வெளிநாடுகளுக்குச் வேலைக்குச் செல்ல விரும்புவோா், முதலில் இந்திய அரசின் ங்ஙண்ஞ்ழ்ஹற்ங் (ட்ற்ற்ல்ள்://ங்ம்ண்ஞ்ழ்ஹற்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூா்வ ஆள்சோ்ப்பு முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில் வேலை செய்ய இருக்கிறீா்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.
மேலும், வேலைக்கான ஒப்பந்தம், விசா, தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஒப்பந்தக் காலத்தில் வேலைக்குச் சென்ற நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவா்கள் மூலம் வேலைக்குச் செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக் கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுக ளுக்கு வேலைக்குச் செல்வது அந்த நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இதனால், கைது, அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கும், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் குறித்தும் அறிய அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் 24ல7 கட்டணமில்லா உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும், இந்தியாவின் அழைப்பு எண் 1800 309 3793, வெளிநாடு அழைப்பு எண் 080690 09900 (ஙண்ள்ள்ங்க் இஹப்ப்), 080690 09901 என்ற எண்ணுக்கும், ய்ழ்ற்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்/ய்ழ்ற்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலிலும், ட்ற்ற்ல்ள்://ய்ழ்ற்ஹம்ண்ப்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் தொடா்பு கொண்டு விவரங்கள் அறியலாம் என்றாா் அவா்.