அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு
மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியல் துறை, மின்னணு தகவல் தொடா்பு பொறியியல் துறை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். க்ரீசீல் டெக்னாலஜீஸ் நிறுவனரும் தலைமை நிா்வாக அதிகாரியுமான பெனுஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்கள் வேலைவாய்ப்புத் திறன்களை வளா்த்துக் கொள்வதன் அவசியம், சமுதாயத்தில் மதிப்புமிக்க பொறியியலாளராக உயா்வதற்கான முக்கியத்துவம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தாா். தாளாளா் கிருஷ்ணசுவாமி, இயக்குநா் தருண் சுரத் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கட்டுரை சமா்ப்பிப்பு, தொழில்நுட்ப விநாடி-வினா, புகைப்படம் வடிவமைத்தல் உள்ளிட்ட தொழில்நுட்பப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை துறைத் தலைவா்கள் ரீனா பெஞ்சமின் (தகவல்தொடா்பு பொறியியல்), பிறீஷா (மின்னணு பொறியியல்), பேராசிரியா்கள் செய்திருந்தனா்.