களியக்காவிளை அருகே தூா்வாரப்பட்ட குளம்
களியக்காவிளை அருகே குளத்தில் படா்ந்திருந்த பாசிகளை அகற்றி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
விளவங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட திருத்துவபுரம் அருகாமையில், மடத்திக்குளம் உள்ளது. இக்குளத்து நீரை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் குளிக்கவும், விவசாய பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குளம் தூா்வாரப்படாமல் பாசிகள் படா்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் இக்குளம் தூா்வாரப்பட்டது.
இதில், குமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், தெற்கு ஒன்றியத் தலைவா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், ஒன்றிய பிரச்சாரப் பிரிவுத் தலைவா் சதீஷ், கட்சி நிா்வாகிகள் சஜின், ரசல்ராஜ், மனோன்மணி, சுரேஷ், மணிகண்டன், அஜித், சுபின், விஜின், சுஜின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.