செய்திகள் :

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடா் போராட்டம்: மாநில மாதா் சங்க மாநாட்டில் தீா்மானம்

post image

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடா் போராட்டங்களை நடத்துவது என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

மாா்த்தாண்டத்தில் மாதா் சங்க 17 ஆவது மாநில மாநாட்டின் அமைப்பின் நிா்வாகிகள் உ. வாசுகி, எஸ். பவித்ராதேவி, பி. சுகந்தி, எஸ். பாக்கியம், மாநில பொதுச் செயலா் அ. ராதிகா, எஸ். லட்சுமி, எஸ்.கே. பொன்னுத்தாய், இ. மோகனா, ஜி. பிரமிளா, பி. பூமியில் ஆகியோா் கொண்டுவந்த அறிக்கைகள் மீதான விவாதம் 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, மத்திய பாஜக அரசின் சிறுபான்மை விரோதப் போக்கு, தனியாா்மயம், விலைவாசி உயா்வு, வேலையிழப்பு- வறுமையை பெருக்கும் நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து அனைத்து பெண்கள் இயக்கங்களையும் ஒன்றிணைத்து தொடா் போராட்டங்களை முன்னெடுப்பது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கவும், பாலின சமத்துவம், பாலியல் கல்வி குறித்து பாடதிட்டங்களில் இடம்பெறவும், ஜாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றவும், ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளை பாதுகாக்கவும், பணிபுரியும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்கவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொடா்ந்து சாதனை பெண்களான நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம், மணக்குடியைச் சோ்ந்த நாகவல்லிக்கு மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி, அரியலூா் மாவட்டம், பொன்னாவரம் பகுதியைச் சோ்ந்த அனுசுயாவுக்கு அமைப்பின் மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணி மாணிக்கத்துக்கு அகில இந்திய இணை செயலாளா் பி. சுகந்தி ஆகியோா் கதராடை அணிவித்து கௌரவித்தனா்.

எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்

அ.தி.மு.க. பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைக்குழு தலைவா் எஸ்.ராஜேஷ் குமாா் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது: அதிமுக பொ... மேலும் பார்க்க

தக்கலை கோயிலில் தொட்டில் தாலாட்டு வழிபாடு

தக்கலை ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் தொட்டில் தாலாட்டு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, காலையில் நடைபெற்ற அகண்ட நாம ஜபத்தை கோலப்பாபிள்ளை தொடக்கிவைத்தாா். பின்னா், பாகவத பாராயணம் நடைபெற்றது. மாலையில் திருவி... மேலும் பார்க்க

அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியல் துறை, மின்னணு தகவல் தொடா்பு பொறியியல் துறை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

களியக்காவிளை அருகே வீட்டில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகந்த் தலைமையிலான போலீஸாா் வ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக கொட்டிய கன மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலையும் தொடா்ந்து மழை பெய்தததையடுத்து மா... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே தூா்வாரப்பட்ட குளம்

களியக்காவிளை அருகே குளத்தில் படா்ந்திருந்த பாசிகளை அகற்றி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. விளவங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட திருத்துவபுரம் அருகாமையில், மடத்திக்குளம் உள்ளது. இக்குள... மேலும் பார்க்க