செய்திகள் :

இந்தியா - பாகிஸ்தான்: சூர்யகுமாருக்கும் 30%, ஹாரிஸுக்கும் 30% - ஐசிசி அபராதத்தின் பின்னணி என்ன?

post image

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசிய கருத்துக்காக அவருக்கு வழங்கப்படும் கட்டணத்தில் 30% அபராதம் விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

சூர்யகுமார் யாதவ் செய்ததென்ன?

அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய மோதலைக் குறிப்பிட்டுப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

Suryakumar Yadhav
Suryakumar Yadhav

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை, ஏப்ரல் மாதம் நடந்த பகல்ஹாம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது பதிலடி தாக்குதல்களை நடத்திய இந்திய ஆயுதப் படைகளுக்கும் சூர்யகுமார் சமர்பித்தார்.

இதுகுறித்து ஐசிசியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரைத் தொடர்ந்து, செப்டம்பர் 25, வியாழக்கிழமை நடந்த அதிகாரப்பூர்வ விசாரணையின் போது சூர்யகுமார் யாதவின் குற்றமற்றவர் மனுவை (No Guilt Plea) போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நிராகரித்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் சூர்யகுமாருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது பிசிசிஐ.

பாகிஸ்தான் வீரர்கள் மீது புகார்

பாகிஸ்தான் வீரர்கள் மீது புகார்
பாகிஸ்தான் வீரர்கள் மீது புகார்

முன்னதாக ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின் நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ புகார் அளித்திருந்தது. இதற்கு பதிலாகவே சூர்யகுமார் மீது புகார் அளிக்கப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த  21ஆம் தேதி நடந்த போட்டியில் ஹாரிஸ் ரவூஃப் எதிரணியினரைத் தூண்டும் விதமாக செய்கைகளை மேற்கொண்டார்.

ஒரு கட்டத்தில், ஹாரிஸ் இந்திய கூட்டத்தை நோக்கி தனது கைகளை நீட்டி '6-0' என்று சைகை காட்டினார் - மே மாத மோதலின் போது ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவதை கூற்றுக்களைக் குறிப்பிடுவதாக அமைந்தது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இதற்குப் பல தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மற்றொரு வீரரான சாஹிப்சாதா, மட்டையை வைத்து துப்பாக்கி சுடுவதுபோல செய்கை செய்தார்.

ஆனால் அது அரசியலானது அல்ல என விளக்கமளித்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோரும் இதைச் செய்துள்ளனர் என வாதிட்டிருக்கிறார்.

சாஹிப்சாதா ஃபர்ஹானைக் கண்டித்த ஐசிசி அபராதம் விதிக்கவில்லை. ஹாரிஸ் ரவூஃப்-க்கு அவரது கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Ind vs Pak Final: 41 வருடத்தில் முதல்முறை; மீண்டு(ம்) வந்த பாக்., இந்தியா பிளான் என்ன; வெல்வது யார்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் 17-வது ஆசிய கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.லீக் சுற்று முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நான்கு அ... மேலும் பார்க்க

Karun Nair: "அவரிடம் அதிகமாக எதிர்பார்த்தோம்"- விடுவிக்கப்பட்ட கருண் நாயர்; BCCI சொல்லும் காரணமென்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கிரிக்கெட் தனக்கு இரண்டாவது வாய்ப்பு தர வேண்டுமென்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் போதுமான ஆட்... மேலும் பார்க்க

Ind vs Ban: வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது.ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல்... மேலும் பார்க்க

Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதேச பயிற்சியாளர் பளீச்

இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது.ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல்... மேலும் பார்க்க

`அவர்கள் இனி எங்கள் ரைவல்ரி இல்லை' - India - Pakistan குறித்து சூர்யகுமார் யாதவ்

கடந்த (சனிக்கிழமை, செப் 21) துபாயில் நடைபெற்ற ஆசியா கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, செய்தியாளர்கள் சந்திப்பி... மேலும் பார்க்க

இந்தியா 'ஏ' கேப்டன் பதவியிலிருந்தும், தொடரில் இருந்தும் விலகிய ஸ்ரேயஸ் ஐயர்; வெளியான தகவல் என்ன?

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பெறாத ஸ்ரேயஸ் ஐயர், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். முதல் போட்டி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆஸ... மேலும் பார்க்க