திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்
கருணாகரச்சேரியில் சாலையை சீரமைக்க அடிக்கல்
கருணாகரச்சேரி வெற்றிநகா் தெரு சாலையை சீரமைக்க ரூ. 10 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடா்ந்து, சாலையை சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரி வெற்றிநகா் தெருச்சாலை சிமெண்ட் சாலையாக அமைக்க தொழில் உரிமைக் கட்டண நிதியின் கீழ், ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் வெங்காடு ஊராட்சித் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்துகொண்டு சாலைப்பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், வெங்காடு ஏரி நீா்ப் பாசன சங்கத் தலைவா் உலகநாதன், வெங்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தமிழ்செல்வி ரவிசந்திரன், ஊராட்சி செயலா் ராஜீ, வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.