செய்திகள் :

Doctor Vikatan: சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயம்; சுவைக்கா, ஆரோக்கியத்திற்கா?

post image

Doctor Vikatan: பல வீடுகளிலும் வெங்காயம் என்பது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வெங்காயத்தில் சல்பர் தவிர வேறு சத்துகள் இருக்கின்றனவா, வெங்காயத்தைச் சுவைக்காகச் சேர்த்துக்கொள்கிறோமா அல்லது அதில் உண்மையிலேயே மருத்துவ குணங்கள் உள்ளனவா, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டில் எது பெஸ்ட்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

 அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

வெங்காயத்தை வெறும் சுவைக்காகவோ, மணத்துக்காகவோ மட்டும் சமையலில் சேர்ப்பதில்லை. அதற்கென பிரத்யேக மருத்துவக் குணங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

வெங்காயத்தில் நார்ச்சத்து மிக அதிகம். தவிர அதில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி தன்மையானது, உடலில் புண்கள் வந்தால் ஆற்றுவதற்கு உதவும். பொட்டாசியம் சத்தும், வைட்டமின் சி சத்தும் இதில் அதிகம். ஃபோலேட் எனப்படும் இரும்புச்சத்தும் இதில் உண்டு.

சின்ன வெங்காயத்துக்கும் பெரிய வெங்காயத்துக்கும் ஊட்டச்சத்துகளில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. எந்த வெங்காயமாக இருந்தாலும் அதைச் சமைத்துச் சாப்பிடும்போது, அதிலுள்ள வைட்டமின் சி சத்து வீணாகிவிடும். எனவே, வெங்காயத்தை பச்சையாக சாலடாக சாப்பிடுவதுதான் சிறந்தது.

எந்த வெங்காயமாக இருந்தாலும் அதைச் சமைத்துச் சாப்பிடும்போது, அதிலுள்ள வைட்டமின் சி சத்து வீணாகிவிடும்.

வெங்காயத்துக்கு ரத்தம் உறைதலைத் தடுக்கும் பிளட் தின்னிங் தன்மையும் உண்டு. வெங்காயத்தில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

புற்றுநோய் சிகிச்சையில் இருப்போருக்கு, குறிப்பாக, பேலியேட்டிவ் கேர் சிகிச்சையில் இருக்கும்போது அவர்களுக்கு வெங்காயம் சேர்த்த உணவுகள், சாலட் போன்றவை கொடுப்பது சிறந்தது. வெங்காயத்தில் உள்ள கிளிசரைடு எனப்படும் சத்தானது, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலில் பூஞ்சைத்தொற்று ஏற்படாமல் காக்கும். அதனால்தான் பொடுகு உள்ளவர்களுக்கு, இன்ஃபெக்ஷன் பாதித்தவர்களுக்கெல்லாம் வெங்காயச் சாறு பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?

’’இது காய்ச்சல் காலம். வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப் போற நேரத்துல, இந்த மாதிரி காய்ச்சல் வர்றது வருஷம்தோறும் வழக்கமா நடக்குற விஷயம்தான். அதனால யாரும் பயப்படத் தேவையில்லை’’ என்று எல்லோருக்கும் தைரியம் ... மேலும் பார்க்க

``பீர்க்கங்காயும் அதன் தோலும்'' - மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்!

''பார்க்க கரடு முரடாக இருந்தாலும் சுவையிலும், அது தரும் ஆரோக்கியத்திலும் பீர்க்கங்காயை அடித்துக்கொள்ள முடியாது. நீர்ச்சத்து நிறைந்தவை என்பதால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இதை வாரத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்தால், மார்பகங்கள் தளர்ந்து போகுமா?

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே மார்பகங்கள் பருத்துக் காணப்படும். உடல் பருமன் இருப்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். எடையைக் குறைத்தால் மார்பகங்கள் தளர்ந்துபோகும் என்பது உண்மையா? அதனால் எ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு; பாதுகாப்பானதா, பக்க விளைவுகளைத் தருமா?

Doctor Vikatan: சித்த மருந்துகள் தயாரிப்பில் உலோகங்கள் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை. இப்படி உலோகங்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் எந்த அளவுக்குஉடலு... மேலும் பார்க்க

பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்

மாதவிடாய் நாள்களின் அவதிகள் அதிகரிக்க, அந்த நாள்களில் உண்ணும் சில உணவுகளும் காரணமாகலாம். வலியிலிருந்து விடுபட, தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் நித்யஸ்ரீ. Periods pain Vs fatty ... மேலும் பார்க்க

Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதில் மென்மையான பெண் குரல்; இதை சிகிச்சையால் சரி செய்ய முடியுமா?

Doctor Vikatan: என்மகனுக்கு 19 வயதாகிறது. அவனுக்குகுரல் மிக மென்மையாக, பெண் தன்மையுடன் இருக்கிறது. இதனால் நண்பர்கள் மத்தியில் கிண்டல், கேலிக்கு உள்ளாகிறான். தாழ்வு மனப்பான்மை கொள்கிறான். இதைசிகிச்சையி... மேலும் பார்க்க