செய்திகள் :

சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போஸ்!

post image

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் போஸ், தனது பணியாளர்களில் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

கரோனா தொற்றுக்குப் பிறகு, அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது மற்றும் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பு போன்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறாா்.

இதனிடையே உலகளாவிய வர்த்தக சந்தைகளில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழலால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் நடவடிக்கையாக முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பிஒய்டி போன்ற நிறுவனங்கள் ஆள்குறை நடவடிகைகளில் ஈடுபட்டது.

இந்நிலையில், ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான போஸ், தனது பணியாளர்களில், 13,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள செலவு அதிகரிப்பு, இதனால் வாகன உற்பத்தி குறைவு, வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழல் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் கிளைகளில் இருந்து சுமார் 13,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

வாகன சந்தையில் தேவைகள் குறைவு, டிரம்பின் கூடுதல் வரி விதிப்புகளால் ஏற்படும் அதிக செலவுகளை ஈடுகட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. "இந்த முடிவு எங்களுக்கு மிகவும் வேதனையானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேறு வழி இல்லை." என்று கூறியுள்ளது.

உலகளவில் போஸ் சுமார் 4,18,000 பணியாளர் பணி செய்து வருகின்றனர்.

கரோனாவிற்கு பிறகு அமேசான், ட்விட்டர், ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பின்னர் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பிஒய்டி போன்ற நிறுவனங்கள் ஆள்குறை நடவடிகைகளில் ஈடுபட்டது. இந்த வரிசையில் தற்போது போஸ் இணைந்துள்ளது.

Germany's Robert Bosch will cut 13,000 jobs as the world's top autos supplier battles a sluggish market, high costs and pressure from rivals that have left it with an annual cost gap of 2.5 billion euros, it said on Thursday.

ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 9 சதவீதம் சரிவு

இத்தாலிய நிறுவனத்தை வாங்குகிறது டிவிஎஸ்!

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், இத்தாலியின் வாகன வடிவமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனமான என்ஜின்ஸ் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ.வை வாங்கவிருப்ப... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்

சென்னை: தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்துள்ளாா்.சென்னையில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு சனிக்கிழமை காலை 7,645 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,268 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக ... மேலும் பார்க்க

2026 தேர்தல் விஜய்க்கு அரசியல், தேர்தல் என்ன என்பதை புரிய வைக்கும்: எஸ்.வி.சேகர்

சென்னை: 2026 பேரவைத் தேர்தல் விஜய்க்கு, அரசியல், தேர்தல் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும் என்றும், விஜய்க்கு திருச்சியில் வந்த கூட்டம் நாகையில் வரவில்லை, சினிமாவில் கைத்தட்ட உதவும் வசனம்போல் அவர் மக... மேலும் பார்க்க

செஞ்சி: தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலி

செஞ்சி அருகே தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் செம்மேடு கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை... மேலும் பார்க்க

பெண் ஊழியர்களை செல்போனில் ஆபாச படம் எடுத்த சக ஊழியர் கைது

மதுரை மாவட்டம் பரவையை அடுத்த சமயநல்லூரில் உள்ள மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில், சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்ததாக மின் வாரிய சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்... மேலும் பார்க்க