செய்திகள் :

மதுரை: போலீஸ் கஸ்டடியில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர், போலீஸாருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

post image

விசாரணையில் உயிரிழந்த சிறுவன்

மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் முத்து கார்த்திக் என்ற 17 வயதுச் சிறுவனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்த விசாரணையின்போது கடுமையாகத் தாக்கியதில் படுகாயம் அடைந்து முத்து கார்த்திக் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீர்ப்பு!

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு

தன் மகன் இறப்புக்குக் காரணமான மதுரை எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜெயா வழக்கு தொடர்ந்தார். இவருக்கு சட்ட உதவியை மதுரை மக்கள் கண்காணிப்பகம் வழங்கியது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட, மதுரை எஸ்.எஸ் காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ், காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார்.

Lockup Death
Lockup Death | காவல் மரணங்கள்

மேலும், சாட்சிகளை, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக ஆய்வாளர் பிரேமசந்திரன், சார்பு ஆய்வாளர் கண்ணன், ஆய்வாளர் அருணாசலம் ஆகிய மூவரையும் இந்த வழக்கில் சேர்த்து, விசாரணை நடத்தி கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டார்.

ஆய்வாளர் பிரேமசந்திரன், சார்பு ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், தற்போது ஆய்வாளராகப் பதவியில் உள்ள அருணாசலத்தைச் சஸ்பெண்ட் செய்யவும், உடற்கூராய்வின்போது காயங்களை மறைத்து அறிக்கை அளித்த அரசு மருத்துவர் ஜெயக்குமார், மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கலெக்ஷன் ஏஜென்ட்டிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி; ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இளைஞர்களுக்கு சிறை

சென்னை, சின்மையா நகர், வேதா நகரில் வசித்து வருபவர் நாரயணன் (35). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் சாந்தகுமார் என்பவரிடம் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். கோயம்பேடு மற்றும... மேலும் பார்க்க

கல்வராயன் மலை: கோழியை நோக்கிச் சீறிய துப்பாக்கி குண்டு - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கல்வராயன் மலை. இங்கு 50 வருவாய் கிராமங்களும், 170-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் இருக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகவும், விலங்குகள... மேலும் பார்க்க

நெல்லை: கோழிகளைத் தூக்கிச் செல்ல முயன்ற சிறுத்தை; தொடர் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, சிங்கவால் குரங்கு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.இந்த விலங்குகள்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோ சட்டத்தில் கபடி மாஸ்டர் கைது

கோவை சூலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே சூலூரைச் சேர்ந்த அருண்குமார் (38). இவர் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.கோவை அங்... மேலும் பார்க்க

கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் கோட்டை பாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்கிற பெயரில் ஓர் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. அங்குப் பெற்றோர் இல்லாத சுமார் 26 குழந்தைகளைப் பராமரிப்பதாக... மேலும் பார்க்க

சென்னை: இரண்டு திருமணம்; பலருடன் சாட்டிங் - திருட்டு வழக்கில் சிக்கிய அறிமுக நடிகரின் பின்னணி!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சுமதி (பெயர் மாற்றம்). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்து விட, மாமியார், இரண்டு மகன்களுடன் வசித்து வ... மேலும் பார்க்க