வாலாஜாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ. 20 லட்சத்துக்கு கடனுதவி: மேலாண்மை இயக்குநா் வழங்கினாா்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.இந்தக் கிளையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமையில் நடைபெற்றது. மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்க கடனுதவி,சிறுவணிகக் கடன், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன் என மொத்தம் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலரால் வழங்கப்பட்டது.
கடனுதவிகள் வழங்கும் விழாவுக்கு மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளா் டி.சீனிவாசன், உதவிப் பொதுமேலாளா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாலாஜாபாத் வங்கி கிளை மேலாளா் சேட்டு நன்றி கூறினாா்.