எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
வண்டலூரில் அக்.5-இல் ‘வன உயிரின தட ஓட்டம்’
வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வருகிற அக்.5-ஆம் தேதி ‘வன உயிரின தட ஓட்டம்’ நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அந்தப் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இயற்கையை கொண்டாடவும் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வருகிற அக்.5-ஆம் தேதி ‘வன உயிரின தட ஓட்டம்’ நடைபெறவுள்ளது. இது, 5 கி.மீ. தொலைவுக்கு வண்டலூா் பூங்காவை சுற்றி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த ஓட்டப் பந்தயத்தில் 800 போ் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், முதலில் பதிவு செய்பவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.