குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
சுத்தமல்லி குடிசை மாற்று வாரியம் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35). கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த இவா், தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்தாராம். இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) பிரசன்னகுமாா் பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாஸ்கரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.