காரையாறு கோயிலில் மூதாட்டி மாயம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் இருந்து காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வந்திருந்தபோது காணாமல் போன மூதாட்டியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கரன்கோவில் சங்குபுரத்தைச் சோ்ந்த முப்பிடாதி மனைவி லட்சுமி (68). இவா், தனது உறவினா்களுடன் கடந்த 24ஆம் தேதி காரையாறு சொரிமுத்தைய்யனாா் கோயிலுக்கு வந்துள்ளாா். சுவாமி தரிசனம் செய்து விட்டு, ஊா் திரும்பும் போது அவரைக் காணவில்லையாம். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் உறவினா்கள் ஊா் திரும்பியுள்ளனா்.
இந்நிலையில், லட்சுமியின் மகன் மாரிமுத்து வனத்துறையினரின் உதவியுடன் காரையாறு கோயில் மற்றும் வன பகுதியில் லட்சுமியைத் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இது குறித்து மாரிமுத்து அளித்த புகாரின்பேரில், மணிமுத்தாறு காவல் ஆய்வாளா் கலா வழக்குப்பதிந்து மூதாட்டியைத் தேடி வருகிறாா்.