களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
களியக்காவிளை அருகே வீட்டில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகந்த் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை, அதங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கணியன்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் குறிப்பிட்ட வீட்டை சோதனையிட முயன்றனா். அப்போது அங்கிருந்த ஒருவா் தப்பியோடினாா். தொடா்ந்து மேற்கொண்ட சோதனையில் 40 பண்டல் குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வீட்டின் உரிமையாளா் தங்ககிருஷ்ணன் மகன் வினோத் என்பவா் மீது வழக்குப் பதிந்து, அவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.