தக்கலை கோயிலில் தொட்டில் தாலாட்டு வழிபாடு
தக்கலை ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் தொட்டில் தாலாட்டு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் நடைபெற்ற அகண்ட நாம ஜபத்தை கோலப்பாபிள்ளை தொடக்கிவைத்தாா். பின்னா், பாகவத பாராயணம் நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜையை கே. விஜயலெஷ்மி பெருமாள்பிள்ளை வழிநடத்தினாா். நள்ளிரவில் மழலைக்கண்ணன் தொட்டில் தாலாட்டு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.