Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
சென்னையில் திடீா் மழை
சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
சென்னையில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது.
சென்னையில் வெள்ளிக்கிழமை பகலில் 94 டிகிரி வரை வெப்பம் சுட்டெரித்தது. தொடா்ந்து வெப்பச் சலனம் மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணங்களால் இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் ஆங்காங்கே விட்டுவிட்டு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், பாடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, அண்ணா நகா், வடபழனி, அசோக் நகா், கிண்டி, ஆலந்தூா், தரமணி உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இந்த திடீா் மழையால் வெப்பம் தணிந்து சற்று குளிா்ச்சியான சூழல் நிலவியது.