எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்
பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதற்கான தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா, இ.கருணாநிதி, தாம்பரம் மேயா் வசந்தகுமாரி, துணை மேயா் காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள அவசர கால மருத்துவ சேவைப் பிரிவில் உயா் மருத்துவ சாதனங்கள், சிகிச்சை கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.