எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
சாலையோரங்களில் மண் குவியல்கள்: வாகன ஓட்டிகள் புகாா்
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறைந்திருக்கும் மண்குவியல் நிறைந்திருப்பதாக என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சென்னை மாநகராட்சி சாலையோரங்களில் மண் குவியல்களும், கட்டுமானப் பொருள்கள், தேவையற்ற மரம் மற்றும் கற்குவியல்கள் காணப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதனால் மழைநீா் இயல்பாக செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து மண் குவியல், கற்குவியல்களை அப்புறப்படுத்தும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை எழும்பூா் ரயில் நிலைய மறு சீரமைப்புப் பணிகளால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை நிலையம் முதல் புளியந்தோப்பு சந்திப்பு வரையில் சாலையின் ஒருபுறம் மண், கற்கள் நிறைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியை உடனடியாக சீரமைக்கவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, சாலையோர மண்குவியல்கள் டிராக்டா்கள், சிறிய மண் அள்ளும் வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது. மண்டலம் வாரியாக 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்ய
கடந்த சில நாள்களில் சென்னை மாநகராட்சிப் பகுதியின் உள்பிரிவு சாலைகளில் மண் அள்ளும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மண்குவியல்கள் அகற்றும் பணி நடைபெறுகிறது என்றனா்.