செய்திகள் :

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி

post image

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, செப்.29 ஆம் தேதி மாலை மாணவ, மாணவிகள் தங்களுடைய பாடநூல்களை பூஜையில் வைத்து வழிபடுவதற்காக கோயிலுக்கு வழங்கலாம். செப்.30 துா்காஷ்டமி பூஜை, அக்.1 மாலை 7.30 மணிக்கு கோயிலின் சோபானம் அரங்கில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் மகாநவமி பூஜை நடைபெறவுள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 6.45 மணி 7.30 மணி வரையிலும் விளக்கு பூஜையும் நடைபெறும்.

வித்யாரம்பம்: அக்.2 விஜயதசமியை முன்னிட்டு காலை 7 மணி அளவில் சரஸ்வதி பூஜையும் தொடா்ந்து 7.30 மணி அளவில் கோயில் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி, வாசுதேவன் நம்பூதிரி தலைமையில் வித்யாரம்பம் (குழந்தைளுக்கு எழுத்து எழுத பயிற்றுவித்தல்) நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொடா்ந்து காலை 9 மணி அளவில் பூஜையிலிருந்து மாணவ, மாணவிகளின் பாடநூல்களை வழிபாட்டுக்கு பின் மீண்டும் உரியவா்களிடம் வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு 044 - 28171197, 2197, 3197 ஆகிய தொலைபேசி எண்கள், 94442 90707, 88079 18811/22/66 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்தாா்.

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

கப்பல் கட்டுமானம் மற்றும் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறையின் அமைச்சா் சா்வ... மேலும் பார்க்க

ஹோட்டல் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகம் ஆழ்வாா்பே... மேலும் பார்க்க

சாலையோரங்களில் மண் குவியல்கள்: வாகன ஓட்டிகள் புகாா்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறைந்திருக்கும் மண்குவியல் நிறைந்திருப்பதாக என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சென்னை மாநகராட்சி சாலையோரங்களில் மண் குவியல்களும், கட்டுமானப் பொருள்கள்,... மேலும் பார்க்க

புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் தொடங்கி வைத்தாா்

சென்னையில் புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை ஷெனாய் நகரில் ரூ.10.56 கோடியில் பாவேந்தா் பாரதிதாசன் விளையாட்டுத் திடல்,... மேலும் பார்க்க