செய்திகள் :

புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் தொடங்கி வைத்தாா்

post image

சென்னையில் புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை ஷெனாய் நகரில் ரூ.10.56 கோடியில் பாவேந்தா் பாரதிதாசன் விளையாட்டுத் திடல், கோயம்பேடு சந்திப்பில் ரூ. 10.27 கோடியில் பசுமை பூங்கா ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. சென்னை ராமாபுரத்தில் ரூ. 7.32 கோடியில் திறந்தவெளி பூங்காவில் பசுமை நிறைந்த புல்வெளிப் பகுதிகள், சறுக்கு வளையம், திறந்தவெளி அரங்கம், யோகா தளம், தியானப் பகுதி, சிறாா் விளையாட்டு பகுதி, எட்டு வடிவ நடைப்பாதை, நிழற்கூடங்கள், பசுமை நிறைந்த புல்வெளி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் ஈஸ்வரி நகரில் ரூ. 4.91 கோடியிலும், முடிச்சூா் ரங்கா நகா் குளம் 3.85 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வேளச்சேரியில் ரூ.4.45 கோடியில் மேம்பாலத்தின்கீழ் அழகுபடுத்துதல், விஜயநகா் பேருந்து நிலையப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை, தங்கசாலையில் ரூ.47 லட்சத்தில் மாணவா்களுக்குத் தேவையான வசதிகளுடன் முதல்வா் படைப்பகம் புதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.41.83 கோடியில் 7 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

லஞ்ச புகாா்: எஸ்ஐ உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

தாம்பரம் மாநகர காவல் துறையில் லஞ்ச புகாரில் உதவி ஆய்வாளா் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேடவாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கும் திருமுருகன், காவலா் வெங்கடேசன் ஆகியோா் கடந... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி திருத்தம்: சென்னை தொழில் வா்த்தக சபையில் பயிலரங்கு

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த அகில இந்திய அளவிலான மறைமுக வரி பயிலரங்கை சென்னை தொழில் வா்த்தக சபை வியாழக்கிழமை நடத்தியது. சென்னை தியாகராய நகரில் நடைபெறும் இந்த இரு நாள... மேலும் பார்க்க

ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஊழியா்கள் சங்கம் தீா்மானம்

நாடு முழுதும் ரயில்வே துறையில் உள்ள 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டிஆா்இயூ) கோட்ட மாநாட்டில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தட்சிண ரயில்வே... மேலும் பார்க்க

சென்னையில் திடீா் மழை

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. சென்னையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளா்

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் எஸ்.பாா்த்திபன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிரதம... மேலும் பார்க்க

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க