செய்திகள் :

Karun Nair: "அவரிடம் அதிகமாக எதிர்பார்த்தோம்"- விடுவிக்கப்பட்ட கருண் நாயர்; BCCI சொல்லும் காரணமென்ன?

post image

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கிரிக்கெட் தனக்கு இரண்டாவது வாய்ப்பு தர வேண்டுமென்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் போதுமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் கரியருக்கு முடிவுகட்டப்பட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

Karun Nair விடுவிப்பு - பிசிசிஐ சொல்லும் காரணம்?

33 வயதாகும் கருண் நாயர் இந்தியாவில் நடக்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக தேவதத் படிக்கல் அணியில் இடம்பெற்றுள்ளார்.

Karun Nair
Karun Nair

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது இடங்களில் களமிறங்கிய கருண் நாயரிடம் இந்திய அணி அதிகம் எதிர்பார்த்ததாக தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூறியிருக்கிறார்.

"இங்கிலாந்தில் கருண் நாயரிடமிருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்த்தோம். தேர்வு ஒரு இன்னிங்ஸைப் பொருத்ததாக இருக்க முடியாது. தேவதத் படிக்கல் எங்களுக்கு பல ஆப்ஷன்களை வழங்குகிறார். ஒவ்வொரு வீரருக்கும் குறைந்தபட்சம் 15-20 வாய்ப்புகளாவது கொடுக்க விரும்புகிறோம், ஆனால் எப்போதும் அது சாத்தியமில்லை." என அவர் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக படிக்கல் 150 ரன்கள் எடுத்தார், இது அவர் அணியில் மீண்டும் இடம் பெற வழிவகுத்துள்ளது.

தேவதத் படிக்கல்

"தேவதத் படிக்கல் இந்தியாவுக்குள் நல்ல ஃபார்மை காட்டியிருக்கிறார். கருண் நாயரிடமிருந்து நாங்கள் இங்கிலாந்தில் அதிகம் எதிர்பார்த்தோம்" எனக் கூறியுள்ளார் அஜித் அகர்கர்.

மறக்க முடியாத Karun Nair-இன் கரியர்

2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்கள் அடித்ததன் மூலம் வெளிச்சம் பெற்றார் கருண் நாயர். அதன்பிறகு அதிகம் சோபிக்காதவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஞ்சி டிராபியில் 8000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்திருந்தார்.

ஐபிஎல்-லிலும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஒரு போட்டியில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ் களமிறங்கியவர் 21.83 சராசரியுடன் 131 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். 4வது டெஸ்டில் அவருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் அணியில் சேர்க்கப்பட்டார். கடைசி போட்டியில் களமிறங்கிய கருண் கடினமான சூழலில் 50 ரன்கள் சேர்த்தாலும் அணியில் அவரது இடத்தைத் தக்கவைக்க அது போதுமானதாக இல்லை.

Ind vs Ban: வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது.ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல்... மேலும் பார்க்க

Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதேச பயிற்சியாளர் பளீச்

இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவில் நடைபெற்று வருகிறது.ஏ, பி என இரண்டு குழுக்களாக 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இரு குழுக்களில் முதல்... மேலும் பார்க்க

`அவர்கள் இனி எங்கள் ரைவல்ரி இல்லை' - India - Pakistan குறித்து சூர்யகுமார் யாதவ்

கடந்த (சனிக்கிழமை, செப் 21) துபாயில் நடைபெற்ற ஆசியா கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, செய்தியாளர்கள் சந்திப்பி... மேலும் பார்க்க

இந்தியா 'ஏ' கேப்டன் பதவியிலிருந்தும், தொடரில் இருந்தும் விலகிய ஸ்ரேயஸ் ஐயர்; வெளியான தகவல் என்ன?

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பெறாத ஸ்ரேயஸ் ஐயர், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். முதல் போட்டி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆஸ... மேலும் பார்க்க

Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன் கான்வே ஓபன்

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேசப் போட்டிக்கு முழுக்கு போட்டு 6 வருடங்கள் ஆனாலும், ஐ.பி.எல்லில் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார... மேலும் பார்க்க

Ind Vs Pak: இந்தியாவுக்கெதிரான போட்டியில் சர்ச்சையான AK 47 செலிப்ரேஷன்; பாக்., வீரர் விளக்கம் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.இப்போட்டியில் பாகிஸ்தான் அணியினர், லீக் சுற்றில் இந்தியாவிடம் மோசமா... மேலும் பார்க்க