செய்திகள் :

Ladakh violence: போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு யார் காரணம்; மத்திய அரசின் அறிக்கை சொல்வதென்ன?

post image

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக்கை, மத்திய பாஜக அரசு 2019-ல் அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமாக மாற்றியது.

இதனால், லடாக்கின் நீண்டநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து மற்றும் லடாக்கிற்கு அரசியலமைப்பின் பிரிவு 244-ன் கீழ் ஆறாவது அட்டவணையை நீட்டிக்கக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்டம்பர் 10-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே, லடாக் உச்ச அமைப்பின் இளைஞர் பிரிவு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

லடாக் போராட்ட வன்முறை
லடாக் போராட்ட வன்முறை

இந்த நிலையில், போராட்டம் நேற்று (செப்டம்பர் 24) லே நகரில் வன்முறையாக வெடிக்கவே இளைஞர் குழுவுக்கும் காவல்துறைக்கும் மோதல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர்.

அதையடுத்து ஊரடங்கும் போடப்பட்டது. மறுபக்கம், சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தையும் முடித்துக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, போராட்டம் வன்முறையாக மாறியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது.

அந்த அறிக்கையில், "லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை நீட்டிப்பு கோரிக்கையை வலியுறுத்தி, செப்டம்பர் 10-ம் தேதி சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இந்திய அரசு இதே விஷயத்தில் லே உச்ச அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகைய பேச்சுவார்த்தையின் மூலம், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 45 சதவிகிதத்திலிருந்து 84 சதவிகிதமாக்கியது, கவுன்சில்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு, போதி மற்றும் புர்கியை அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவித்தது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக்
Sonam Wangchuk - சோனம் வாங்சுக்

இதோடு 1,800 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்ட சில நபர்களுக்கு இதில் அதிருப்தி.

பேச்சுவார்த்தையை அவர்கள் நாசமாக்க முயற்சிக்கிறார்கள். உயர்மட்ட அதிகாரக் குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 6-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், செப்டம்பர் 25, 26 தேதிகளில் லடாக்கைச் சேர்ந்த தலைவர்களுடனான சந்திப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

சோனம் வாங்சுக்கின் கோரிக்கைகள் அனைத்தும், உயர்மட்ட அதிகாரக் குழுவில் நடந்த விவாதத்தின் ஒருபகுதிதான். பல தலைவர்கள் அவரிடம் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தியும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

அரபு வசந்தம் போராட்டம், நேபாளத்தின் ஜென் Z போராட்டம் ஆகியவற்றை உதாரணமாகக் காட்டி மக்களைத் தவறாக வழிநடத்தினார்.

செப்டம்பர் 24-ம் தேதி காலை 11:30 மணியளவில் அவரின் ஆத்திரமூட்டும் தூண்டப்பட்ட ஒரு குழு உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து வெளியேறி, ஒரு கட்சி அலுவலகம், லே-வில் அரசு அலுவலகத்தை தாக்கி தீ வைத்தது.

மேலும், அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கி போலீஸ் வாகனத்தை எரித்தனர். இதனால், தற்காப்புக்காகப் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துரதிஷ்டவசமாகச் சிலர் உயிரிழந்தனர்.

மாலை 4 மணிக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில், சோனம் வாங்சுக் தனது ஆத்திரமூட்டும் உரைகள் மூலம் கும்பலைத் தூண்டிவிட்டார் என்பது தெளிவாகிறது.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்காமல் ஆம்புலன்ஸில் தனது கிராமத்திற்குச் சென்றார்.

போதுமான அரசியலமைப்பு பாதுகாப்புகளை வழங்குவதன் மூலம் லடாக் மக்களின் விருப்பத்திற்கு அரசு உறுதியளிக்கிறது.

பழைய மற்றும் ஆத்திரமூட்டும் வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மக்கள் பரப்பக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோவை: திமுக மாநகர மாவட்டச் செயலாளர் மாற்றமா? - பின்னணி என்ன?

கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கோவை கார்த்திக்கின் கட்சி பொறுப்பை தி.மு.க தலைமை அதிரடியாக பறித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் பின்னணி குறித்து கோவை மாவட்ட திமுகவினரிடம் விசாரித்தோம்."கோவை உள்ள... மேலும் பார்க்க

லடாக் போராட்டம்: "சர்வாதிகார பாஜக-வால் முழு நாட்டுக்குமான போராட்டமாக மாறும்" - கெஜ்ரிவால் எச்சரிக்கை

பாஜக தலைமையிலான மத்திய அரசால் 2019-ல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து (அரசியலமைப்பு பிரிவு 370) நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன.இதில், ஜ... மேலும் பார்க்க

"மாண்பில்லாத இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ்

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்கள... மேலும் பார்க்க

``காந்திஜியை மாற்றிவிட்டு கோட்சே, சாவர்க்கரை கொண்டுவர மத்திய அரசு திட்டம்'' - பினராயி விஜயன் ஆவேசம்

ஜனநாயக மாதர் சங்க மாநாடுஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்றது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சுஇதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொ... மேலும் பார்க்க

கைம்பெண்களின் சொத்து வழக்கு: "திருமணமானால் பெண்ணின் கோத்திரம் மாறும்" - உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

திருமணமான இந்து பெண் வாரிசு இல்லாமல், அதேசமயம் உயில் எழுதி வைக்காமல் இறந்து போகும் பட்சத்தில் அவரது சொத்து கணவன் வீட்டாருக்குச் சொந்தம் என்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்ட... மேலும் பார்க்க

கழுகார்: `கறி விருந்து வைத்த மாஜியின் பிளான்' டு அடிக்கப் பாய்ந்த சூரியக் கட்சிப் பிரமுகர் வரை

வேகமெடுக்கும் சிட்டிங் தலைமை!டெல்லி போட்ட உத்தரவு...மலர்க் கட்சியின் டெல்லி மேலிடம், சிட்டிங் தலைமைக்கு சில உத்தரவுகளைப் போட்டிருக்கிறதாம். அதன்படிதான், சார்பு அணிகளுக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் நிய... மேலும் பார்க்க