செய்திகள் :

வாழ்க்கைக்காக கொஞ்சம் படியுங்கள்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்

post image

வாழ்க்கையில் வெற்றிபெற படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.

சென்னையில் நடைபெறும் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், ``உலகத்திலேயே பெரிய செல்வம் - கல்வி. என் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு, பள்ளிசென்று படித்ததால் மட்டுமே, என்னால் 3 வேளை சாப்பிட்டு பள்ளிசென்று படிக்க முடிந்தது.

என் அப்பா நடந்து பள்ளிக்குச் சென்றதால்தான், என்னால் ஆட்டோ, ரிக்‌ஷா, ரயிலில் செல்ல முடிந்தது. ஒரு தலைமுறையில் ஒருத்தர் நன்றாகப் படித்தால், அதற்கு அடுத்த தலைமுறைகள் நன்றாக இருக்கும்.

ஒரு டிகிரி வாங்கிய என் அப்பா, என்னை 2 டிகிரி வாங்க வைத்தார். என் அக்கா 3 டிகிரி முடித்துள்ளார்.

சினிமா துறையில் ஏதேனும் சவால் வந்தாலும், எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை - என்னிடம் உள்ள 2 டிகிரி மட்டுமே. அதை வைத்துக்கொண்டு என்னால் பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான்.

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்றால், படியுங்கள். மதிப்பெண்ணுக்காகக் கொஞ்சம் படிங்கள்; வாழ்க்கைக்காகக் கொஞ்சம் படிங்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:பாமகவில் இருதரப்பு இல்லை: ராமதாஸ்

Actor Sivakarthikeyan advices Students in Kalviyil Sirantha Tamilandu

உங்களுக்குத் துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கிறேன்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

தமிழக அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.சென்னையில் நடைபெற்ற `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் பலவீனமானவர்கள்: கே. எஸ். அழகிரி

சிதம்பரம்: அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். ஆதலால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.சிதம்பரத்தில், வியாழக்கிழம... மேலும் பார்க்க

அடுத்தடுத்த திருப்பங்களுடன் அதிமுக..! செங்கோட்டையன் - ஓ. பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை!

அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மூத்த தலைவர் செங்கோட்டையன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்ற... மேலும் பார்க்க

ஆயுதபூஜை தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை!

ஆயுதபூஜை , விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஆயுத... மேலும் பார்க்க

பாமகவில் இருதரப்பு இல்லை: ராமதாஸ்

தான் மட்டுமே தேர்தல் கூட்டணி குறித்த முடிவு எடுப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும்நிலையில், அக்கட்... மேலும் பார்க்க