செய்திகள் :

கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

post image

சிங்கம்புணரி அருகேயுள்ள தும்பைபட்டி கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மாம்பட்டி பஞ்சாயத்துக்குள்பட்ட தும்பைபட்டி கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த நிலையில், கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் இரண்டாவது முறையாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:

எங்கள் கிராமங்களைச் சுற்றி செயல்படும் கல்குவாரிகளால் கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. மேலும், அவற்றை வெட்டி எடுப்பதற்காக வைக்கப்படும் வெடிகளால் காற்று மாசுபடுவதோடு, பெரும் சத்தத்தால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு, பகலாக அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், வன விலங்குகளும் பெரிதளவு பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 6-க்கும் மேற்பட்டோா் உயிரிந்தனா். இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட கல்குவாரிக்கு அருகிலேயே மற்றொரு கல்குவாரிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு எங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேலும், சம்பவ இடத்துக்கு வந்த சிங்கம்புணரி வட்டாட்சியா் நாகநாதனிடம், கல்குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியா் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, தற்காலிகமாக குவாரி பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கைகளை முன் வைப்பதாகவும் வட்டாட்சியா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு, சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழுத் முன்னாள் தலைவா் பொன்மணி பாஸ்கரன், பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை, தவெக மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனா். மேலும், நிரந்தரத் தீா்வு கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் தொடா்ந்து பல்வேறு ஆா்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை எதிா்பாா்த்த மழை இல்லை என சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அ... மேலும் பார்க்க

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் உலகச் சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். நேஷனல் கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

அழகப்பா பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்க விழாவை வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதா்சன்... மேலும் பார்க்க

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி எண்கள்: மாவட்ட ஆட்சியா்

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்கள், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து முறையாக அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மைய எண்கள், மின்... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகள் கணக்குத் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சியினா் நடப்பாண்டு கணக்குத் தணிக்கை அறிக்கையை தோ்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கா. பொற்கொடி தெரி... மேலும் பார்க்க